அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சானம் கலப்பு - வானதி சீனிவாசன் கண்டனம்!

 
Vanathi seenivasan

விருதுநகர் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சானம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வன்மையாக கண்டிக்கிறேன்..திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு குடிநீரில் மலம் கலப்பது சாணம் கலப்பது என்று சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை வேங்கை வயல் சம்பவம் தொடர்பான விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இந்த அசம்பாவிதம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால் தமிழக முதல்வருக்கு இதை பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை  ஹிந்து மதம் குறித்து பொய் பிரச்சாரம் செய்ய மட்டுமே நேரமிருக்கிறது. 


இது போன்ற கொடூரங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முதல்வர் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.