“இதை சாப்பிட்டால் மூலம் வராது, ஆண்மை சக்தி அதிகரிக்கும்”- காக்கா கரி சாப்பிட்டவர் கைது
பாதுகாக்கப்பட்ட நீர்க்காகத்தை வேட்டையாடி சமைத்து ரீல்ஸ் வெளியிட்ட வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளையைச் சேர்ந்தவர் டைமண்ட் கிஷோர் (31). வேன் ஓட்டுநரான இவர் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 13-ம் தேதி சாஸ்தான்கரை குளத்தில் பாதுகாக்கப்பட்ட நீர்க்காகத்தை வேட்டையாடி, சமைத்து சாப்பிடுவது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார்.
🔹பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி சமைத்து வீடியோ வெளியிட்டதாக புகார் - வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
— Subin Kumar Manikandan (@subinkumar97) September 20, 2026
♦️நீர்காகம் (Cormorants), குளத்துக்கோழி (Coots), கொக்கு (Egrets) உள்ளிட்டவை இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ளன.… pic.twitter.com/bVhYxgjucK
இது தொடர்பாக பறவை ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டைமண்ட் கிஷோரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட வனத்துறை நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நீர்காகம் (Cormorants), குளத்துக்கோழி (Coots), கொக்கு (Egrets) உள்ளிட்டவை இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ளன. இச்சட்டத்தின் 9-வது பிரிவின்படி, பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது.

