இது என்னடா வாஜ்பாய்க்கு வந்த சோதனை! கமலாலயம் கோலத்தால் சர்ச்சை
கமலாலயத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக பாஜக மகளிரணி சார்பில் அவரது உருவத்தை கோலமாக வரைந்து அகல் விளக்குகள் ஏற்றினர்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக வின் மகளிர் அணி சார்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பாஜக மகளிர் அணி சார்பில் கமலாலயத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் உருவம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் உருவம் இட்டு, 1000 கும் மேற்பட்ட விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பெண்களால் ஒளிரூட்டினர். கமலாலயத்தில் விளக்குகளால் போடப்பட்ட வாஜ்பாய் கோலம் வாஜ்பாய் போல் இல்லாததால் கிண்டலுக்கு உள்ளானது.


