“பெண்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்? தவெகவில் டாமினேஷன்..”- இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி பரபரப்பு குற்றச்சாட்டு

 
ச் ச்

தமிழக வெற்றிக் கழகத்தில் இளம் பெண்கள் ஓரம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக கோவையை சேர்ந்த தவெக பெண் பிரமுகர் தெரிவித்துள்ளார். 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. பட்டதாரியான இளம் பெண்ணான இவர் இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த போது, விஜய் ரசிகையான  தன்னையும் தவெகவில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து கட்சி மற்றும் அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுதி வரும் வைஷ்ணவியை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தவெக வில் இளம் பெண்கள் ஓரம்கட்டப்படுவதாகவும், பெண்களே அரசியலுக்கு வரக்கூடாது என்பது போல மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொள்வதாக கூறி, தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய வைஷ்ணவி கூறுகையில், “கடந்த மூன்று மாத காலமாக என்னை கடுமையாக டாமினேஷன் செய்தனர். ஆரம்பத்தில் மாவட்ட நிர்வாகிகள் முழுமையான ஆதரவளித்தனர்.  ஆனால் எப்போது சமூக வலைதளங்களில் தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்க துவங்கியதோ, அப்போது முதல் கட்சியிலிருந்து ஓரம் கட்டுவது,  பெரிய அழுத்தம் கொடுப்பது போல நடந்து கொண்டனர். மாவட்ட சார்ந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க மாட்டார்கள், அப்படியே அழைத்தாலும் ஓரம் கட்டி விடுவார்கள். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் வந்தபோது, அவரை சந்தித்து புத்தகம் கொடுக்க முயன்றேன். ஆனால் என்னை நான்கு பேர் சூழ்ந்து கொண்டு மேடைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.  

என் மனதை கல்லாக்கிக் கொண்டு...” - தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி விவரிப்பு  | Coimbatore Vaishnavi leave from the TVK Party - hindutamil.in

இது குறித்து கேட்ட போதும் மிக மோசமான பதிலையே அளித்தனர். அண்மையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்திற்கு கூட வருகிறேன் என கேட்டபோது, கமிட்டியில் இல்லாததால் வர வேண்டாம் என நிராகரித்தனர். ஆனால் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 18 வயதிற்குள் இருக்கும் நிர்வாகிகளின் குழந்தைகள் கூட அழைத்துச் சென்றார்கள். குழந்தைகளை உள்ளே அனுமதித்தது சரியான நடவடிக்கை அல்ல என இது குறித்து கேட்டபோது அப்படித்தான் செய்வோம். நீங்கள் அரசியலுக்கு புதிது என பேசினார்கள். மேலும் அரசியலுக்கு நீங்கள் எதற்கு வருகிறீர்கள், பெண்களுக்கு அரசியல் தேவையா? படித்துள்ளீர்கள், வீட்டிலேயே இருந்து வேலை செய்யுங்கள். ஒரு கட்டத்தில் அரசியல் களத்திற்கு பெண்கள் வரக்கூடாது என அவர்கள் நினைப்பதாகத்தான் தோன்றியது. என்னை பார்த்து அதிக இளம் பெண்கள் இக்கட்சியில் சேர்ந்தார்கள்.  அவர்களும் எனக்கு அழைத்து பெண்களுக்கான டாமினேஷன் அதிகமாக உள்ளது.  எங்களது பல்வேறு பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. எனவே தவெக வில்  பயணிக்க நாங்கள் விருப்பப்படவில்லை தெரிவித்தனர்.  

தலைவரையும்,  கொள்கையையும் பிடித்து வந்தோம். பெண்கள் தவெகவில்  நிராகரிக்கப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் தான் தொடர்ந்து டாமினேஷன் செய்கிறார்கள். எந்த ஒரு கருத்தை கூறினாலும், நீங்கள் சின்ன பொண்ணு எனக் கூறி அதனை நிராகரித்தார்கள்.  பெரியவர்கள் பேசிய பிறகு உங்கள் கருத்தை கூறுங்கள் என பேசினார்கள். பெண்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்? குறிப்பாக இளம் பெண்கள் வரக்கூடாது என்ற கருத்தை முன் வைத்தனர். கட்சித் தொண்டராக இல்லாவிட்டாலும்,  விஜயின் ரசிகராக நான் இருப்பேன். நான் எப்போதும் தளபதி ரசிகையாய் இருப்பேன். மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் தவெக வளரும் இளம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சியாக இருக்கும் எனக்கு கருதினேன். மற்ற கட்சிகள் எப்படி செயல்படுகிறதோ அதேபோலத்தான் தவெக செயல்படுகிறது.  கட்சியிலிருந்து விலகுவது குறித்து பொதுச் செயலாளரை அழைத்து சொல்ல முயன்றேன். போன் எடுக்கவில்லை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன்.  பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து  கொள்ள சென்ற போது மாவட்ட பிரச்சினைகள் குறித்து மாவட்ட செயலாளருக்கு தொகுத்துக் கொடுத்தேன்.  அப்போதும் அங்கு நான் புறக்கணிக்கப்பட்டேன்.  நான் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளேன். ஏதாவது சில நிகழ்ச்சிக்கு மட்டும் தான் தகவல் வரும் அந்த நிகழ்ச்சிகளும் ஓரம் கட்டப்படுகிறேன். மேடையில் கடைசியாக அமர வைப்பது அல்லது வெளியே நிக்க வைப்பது. சமூக வலைதளங்களில் மூலம் தொண்டர்கள் ஆதரவு எனக்கு அதிகமாக இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.  பல்வேறு மாவட்டங்களில் இதே போல் இளம் பெண்கள் அரசியலுக்கு வருவது தடுக்கப்படுகிறது.  ஒரு வேளை தலைவர் அழைத்தால் அவரிடம் இது பற்றி கூறுவேன்” என தெரிவித்தார்.