விஜய் மீது தவெக முன்னாள் நிர்வாகி வைஷ்ணவி போலீசில் புகார்
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

தவெக-வினர் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக பெண் பிரமுகர் வைஷ்ணவி புகார் அளித்துள்ளார். தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பரப்பு வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் புகார் அளித்துள்ளார். தன்னை பற்றி சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். தவெக தொண்டர்கள் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய வைஷ்ணவி, தவெகவில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி த.வெ.க வினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக த.வெ.க தலைவர் விஜய் கண்டன, அறிக்கை எதுவுமே வெளியிடவில்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளேன் என கூறினார். நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் கூறுவதாக தெரிவித்தார். விஜய் ரசிகர்களுக்கு கருத்தியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ வாதம் பிரதிவாதம் வைத்து பேசத்தெரியாது, அவர்களுக்கு தெரிந்தது அனைத்தும் தனிமனித தாக்குதல்கள், அதுவும் மிகவும் கொச்சையாக, கீழ்த்தரமாக பேசுவது மட்டுமே என்றும் வைஷ்ணவி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.


