சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சி!

 
ttn

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

sekar baby

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து அறநிலையத்துறையில் அதிரடியான வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரி, கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,  ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று என அறிவித்திருந்தார்.  ஓராண்டு கால சான்றிதழ் படிப்புக்கான வைணவ பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

sekar

*குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இந்துக்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

*இந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவராக இருத்தல் அவசியம்

*தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் பயிற்சி வழங்கப்படும்

*பயிற்சிக்காலத்தில் தங்குமிடம், உணவு,சீருடை இலவசம்

*மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்

*தகுதி உடையவர்கள் http://hrce.tn.gov.in இணையதளத்தில் டிச.26 வரை விண்ணப்பிக்கலாம்

*நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.