பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாளும் வைஷாலி!

 
modi

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாளுகிறார். 

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாளுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக அறிவித்து இருந்தார்.  


இந்த நிலையில், பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாண்டு வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வணக்கம். நான் வைஷாலி. மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கத்தை கையகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் செஸ் விளையாடுகிறேன். செஸ் போட்டிகளில் நாட்டை முன்னிலைப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.