"பேனாவோடு புதைக்கப்பட்ட கலைஞர் உனக்கொரு கவி வரைவார்" - வைரமுத்து பாராட்டு!!

 
tn

பேனாவோடு புதைக்கப்பட்ட கலைஞர் உனக்கொரு கவி வரைவார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு  வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். 

tn

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை இந்த ஓராண்டு காலத்தில் தமிழக மக்களுக்கு நல்கிய திமுக அரசுக்கு பலரும் வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

முதலமைச்சே!

பிறையில் முழுநிலா
உறைவது போல
உன்
ஓராண்டு ஆட்சியில்
நூறாண்டுச் சாதனைகள்

என்றாலும் எதிர்ப்பு

கொம்புள்ள யானையும்
கொள்கையுள்ள தலைவனுமே
குறிவைக்கப்படுகிறார்கள்

கொம்பு மட்டுமா
திராவிடக் காடுகாக்கும்
தெம்புள்ள யானை நீ

பேனாவோடு
புதைக்கப்பட்ட கலைஞர்
உனக்கொரு கவி வரைவார் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கரூர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சமூக நீதி, சுயமரியாதை, மதச்சார்பின்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை லட்சியமாகக் கொண்டு, அர்ப்பணிப்போடும், தொலைநோக்கோடும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரசு ஓராண்டை நிறைவு செய்திருப்பதில் பெருமகிழ்ச்சி. இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள் எல்லாவற்றிற்கும் மேலாக முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட செயல்பாடு, தாயுள்ளம், அர்ப்பணிப்பு,எளிமை,அசுர உழைப்பு,கனவு போற்றுதலுக்குரியது. முதலமைச்சர் ஆவதற்கு முன்புபார்த்த அதே அணுகுவதற்கு எளிய,அன்புமிகுந்த  அண்ணனைத்தான் இப்போதும் பார்க்கிறேன். அதிகாரமிக்க அரசியலில் இது அரிது.மக்களின் நம்பிக்கை, பேராதரவைப் பெற்று ஓராண்டை மிகச்சிறப்பாக நிறைவு செய்துள்ள இந்த நல்லாட்சி தொடரட்டும்.அன்பிற்கும்,மரியாதைக்கும் உரிய அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும்,அவரது அமைச்சரவைக்கும்,அதிகாரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.