நீட் இலக்கு - கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டார் வைரமுத்து

 
nyy

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையொப்பமிட்டார்.

tn

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 

‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும் 
கையொப்பமிட்டேன்.

“நீட் என்பது 
கல்விபேதமுள்ள தேசத்தில் 
ஒரு சமூக அநீதி என்றேன். 


நீட்தேர்வு 
மருத்துவத்தில் 
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை 
அனுமதிக்க முடியாது என்றேன்

நீட் விலக்கு மசோதாவில் 
குடியரசுத் தலைவர் 
கையொப்பமிட வேண்டும் மற்றும் 
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு 
மாற்ற வேண்டும்" என்று 
கோரிக்கை வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.