இளையராஜாவை திட்டிய வைரமுத்து - எச்சரித்த கங்கை அமரன்

 
tn

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார்.  இந்த வழக்கில் தான் அனைவருக்கும் மேலானவன் என கருத்து தெரிவித்திருந்த இளையராஜா பின்னர் பாடல்களில் தனது உரிமை தான் மேலானது என்று கூறியதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அதற்கு நீதிபதிகளோ, இசையமைப்பாளர் பாடல்களுக்கு உரிமை கேட்பது போல,  பாடல் ஆசிரியர்கள் உரிமை கேட்டால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். 

tn

 இந்த சூழலில் கவிஞரும்,  பாடலாசிரியருமான வைரமுத்து இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது , இசையும்,  பாடல் வரிகளும் இணைந்தால் நல்ல பாடல் உருவாகும்.  சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாக திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்து கொண்டவன் ஞானி;  புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி  என்று பேசியிருந்தார். 

tn

வைரமுத்து இளையராஜாவை சீண்டுவது போல் அவரது பேச்சு இருந்தது.  இது தொடர்பாக இளையராஜாவின் சகோதரரும்,  இசையமைப்பாளருமான கங்கை அமரன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மனுஷனுக்கு எப்போதுமே நன்றி வேணும் .  வைரமுத்து அவர்களை வாழ வைத்த இளையராஜாவை போட்டோ வைத்து அவர் கும்பிட வேண்டும் . இனிமேல் வைரமுத்து  இளையராஜா பற்றி ஏதேனும் குற்றமோ , குறையோ சொல்வதாக இருந்தால் நீங்கள் கடுமையான விளைவுகளை வேறு மாதிரி சந்திக்க நேரிடும். வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.