முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து!

 
tn

கவிஞர் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துத்
தமிழர் திருநாள்  வாழ்த்துரைத்தேன். அவரும் என்னை வாழ்த்தினார் கோபாலபுரத்தில் கலைஞர் கோலோச்சிய கூடத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி
நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. 


மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.