அண்ணே... நீங்க சிஎம்! விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்... பதிலுக்கு விஜய் செய்த செயல்

 
ச்

முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் உட்சபட்ச மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அவருக்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டின் பணிப்பெண்ணை பதிலுக்கு முதலமைச்சர் விஜய், அப்பெண் செய்ததுபோன்றே திருஷ்டி கழித்த வீடியோ வைரலாகிவருகிறது.

s


முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்துவருகிறார். அந்தவகையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய். அப்போது வைகோ, தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளை முதல்வர் விஜய்க்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் உட்சபட்ச மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அவருக்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டின் பணிப்பெண்ணை பதிலுக்கு முதலமைச்சர் விஜய், அப்பெண் செய்ததுபோன்றே திருஷ்டி கழித்த வீடியோ வைரலாகிவருகிறது. பின்னர் அப்பெண் விஜயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.