மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் - மதிமுக முக்கிய அறிவிப்பு

 
vaiko ttn

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

சென்னையில், பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்

vaiko

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, நாளை 25.01.2024 காலை 9 மணிக்கு, மூலக்கொத்தளம் இடுகாட்டில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

vaiko

மாலை 5 மணிக்கு தாம்பரம், சண்முகம் சாலையில், சென்னை மண்டல மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி நடத்தும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.