நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைது செய்துக- வைகோ

 
பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்! – வைகோ அழைப்பு

செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்கிடுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் - பல்லடம் வட்டத்தைச் சார்ந்த திரு நேசபிரபு என்பவர் நியூஸ்-7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பரபரப்பான சூழ்நிலையில், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுகலம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரித்த வைகோ… கருப்புக் கொடி காட்டுவது  உறுதி | Make sure to show black flags to Prime Minister Says Vaiko - Tamil  Oneindia

தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட நேச பிரபு அவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார். தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறும், செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.