“அன்னைக்கு திருமணத்தில் என் பக்கம் கூட ஸ்டாலின் திரும்பி பார்க்கல”- வைகோ

 
“அன்னைக்கு திருமணத்தில் என் பக்கம் கூட ஸ்டாலின் திரும்பி பார்க்கல”- வைகோ 

மதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள், ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திருமண விழா : ஸ்டாலின், வைகோ, சீமான் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்பு!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ, “திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி Corruption,கமிஷன் இல்லாத தவெக ஆட்சியை ஆதரிக்கிறோம். நான் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். பட்டினப்பாக்கம் இல்லத்தில் 1 மணிநேரம் 20 நிமிடம் அவரிடம் பேசினேன். மதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள், ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார். 2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை.

மதிமுக MLA-க்கள் 2 பேரும் ராஜினாமா செய்தால் கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும், அப்போது உங்களுக்காக நானே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்வேன் என முதலமைச்சர் விஜய் கூறினார். அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என தகவல் வெளியானது. இது உண்மையாக இருந்திருந்தால் அரசியல் மோசடி. திமுகவுடன் தோழமையில் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தோம்” என்றார்.