விஜய் செய்திருப்பது யாரும் செய்யாத பித்தலாட்டம் - வைகோ

 
விஜய் செய்திருப்பது யாரும் செய்யாத பித்தலாட்டம் - வைகோ

மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்! – வைகோ அழைப்பு

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “வாக்குரிமையில் தலையிட்டு லட்சக்கணக்கானவர்களை வாக்காளர்களாக இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர். எமர்ஜென்சி காலத்தில் கூட இதுபோன்ற நெருக்கடி ஏற்படவில்லை. மதிமுக சார்பில் SIR தமிழ்நாட்டில் செய்ய கூடாது என  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். தமிழகம் மது,போதையின் பிடியில் சிக்கி எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து கொண்டு இருக்கிறது. அண்மையில் கோவையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பள்ளி,கல்லூரி பக்கத்தில் இருக்கும் கடைகளில் எளிதாக போதை பொருட்கள் கிடைக்கிறது. சமத்துவ நடைபயணம் என்கிற பெயரில் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். 

திமுக மதுவிலக்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அரசின் கண்களில் மண்ணை தூவி விட்டு விற்பனை செய்கிறார்கள். கடற்கரை மணலில் கோட்டை கட்டிக்கொண்டு விஜய் பேசுகிறார். பொறுப்புணர்வு, குற்ற உணர்ச்சி இல்லாமல்,மருத்துவ வசதி எதுவும் செய்யாமல் தனக்கு ஒரு கூட்டம் வருகிறது என்று காட்டுவதற்காக, ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு பேருந்தை வைத்துகொண்டு, அதன் மீது ஏறிக்கொண்டு சினிமா வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார். பொதுவாழ்வு என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியாது,ஒருவர் தற்போது முதலமைச்சராக ஆகி விட்டதாக பேசிவருகிறார். கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை கரூர் சென்று சந்திக்காமல் மாமல்லபுரம் வரவைத்து சந்தித்தது மிகப்பெரிய பித்தலாட்டம். அரசியலில் அரிச்சுவடி தெரியாத விஜய், எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்கிறார். காகித கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறாரா?அவர் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது” என்றார்.