விஜய்யை விமர்சிக்காமல் காலை சாப்பாடு இறங்காதா?- விசிகவை விமர்சித்த வைகோ
தமிழக வெற்றி கழகக் கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணி கட்சிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய வைகோ, வீசிக்க மற்றும் காங்கிரசை மறைமுகமாக சாடினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய இரண்டு தலைவர்களும், ஆளும் கட்சியில் இருக்க கூடிய இரண்டு தலைவர்களும் தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது என பொழுது விடிந்ததும் பேசுகின்றனர். விஜய் ஆட்சியை அட்டாக் செய்யாமல் அவர்கள் காலை சாப்பாடு இறங்காது. அதிமுகம் ஒரு கட்சி அமைச்சரவையில் இருந்து கொண்டே விமர்சனம் செய்கிறது. மதிமுக மற்றும் முஸ்லீம் லீக் மட்டுமே இந்த அரசை விமர்சனம் செய்யாத கட்சிகள்.
அறிவுப் பொக்கிஷங்கள் கொண்ட நூலகத்தில், அதுவும் எதையும் அறிவுக்கு உட்படுத்தி ஆராய வேண்டும் எனக் கூறிய பெரியாரின் பெயரில் உள்ள நூலகத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஏஐ மூலம் கண்டதை உளரி வைத்து ஆயிரக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். இதில் இவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்கள் என்றால் மற்ற துறைகளில் எவ்வளவு செய்திருப்பார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்காக காவல்துறையை கூலிப்படையாக பயன்படுத்தியவர் பழனிசாமி. பொள்ளாசி பாலியல் வன்கொடுமை, ஜெயராஜ் பென்னிக்ஸ் காவல்துறை சித்ரவதையால் உயிழந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரமாக நிமிர்ந்து நின்றதாம், தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பதாக கூறுகிறார். தவெக அரசின் காவல்துறையை கையாலாகாதது என திமுக-வினர் கூறிவருகின்றனர். அமைச்சராக இருந்த கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக காவல்துறையை கையாலாகாதது எனக் கூறமுடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

