“செய்த தவறுக்கு ஓபிஎஸ் இப்போது அனுபவிக்கிறார்”- வைகோ

 
ட்

ஓ.பன்னீர் செல்வம் நடுத்தெருவில் நிற்கிறார், அதனால் அவரை பற்றி நான் பேசியிருக்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “2011 ஆம் ஆண்டு நடந்த கதை பற்றி இப்போது எதற்கு கேள்வி கேட்கிறீர்கள் ? அதை பற்றி நான் பேசவில்லை. 2011 ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக ஓபிஎஸ் நான் கூட்டணிக்கு வர மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கூறிவிட்டார்.கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. 
அவ்வாறு ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியதால் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை. மதிமுக அந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம்.


திமுகவை நாங்கள் ஏன் விமர்சனம் செய்வதில்லை என்றால், கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணி கட்சி பற்றி விமர்சனம் செய்வது தர்மம் கிடையாது. தமிழ்நாட்டுக்கு பச்சை துரோகம் செய்யும் ஒரு மனிதர் ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு பாஜகவுக்கு எடுபிடியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். வரும் 20 தேதி புதிய கட்சி மற்றும் கொடியை மல்லை சத்யா அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அதுகுறித்து எனக்கு i don't care  அதை பற்றி நாங்கள் கவலை பட வில்லை, விலகி சென்றவர்கள் நன்றாக இருக்கட்டும், வாழ்க வசவாளர்கள்” என்றார்.