மதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்கள்- வைகோ
Updated: Jul 10, 2025, 20:36 IST1752160007655
மதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பூந்தமல்லியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “உயிரைக் கொடுத்து 31 ஆண்டுகளாக கட்சியை பாதுகாத்து வளர்த்துள்ளேன். என் உயிரைத் தியாகம் செய்கிறேன். ஆனால், சிலர் மதிமுக இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். மதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் நான் 31 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிப் பாதுகாத்து வருகிறேன். திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்றார்.


