“என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்”- பதவிக்காலம் முடிவடையும் நாளில் மாநிலங்களவையில் முழங்கிய வைகோ

 
வைகோ வைகோ

ஈழத்துக்காக என் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறைவு உரையாற்றினார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய வைகோ, “என்னை மாநிலங்களவைக்கு 1978 முதல் தொடர்ந்து 3 முறை முன்னாள் முதல்வர் கருணாநிதி அனுப்பினார். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் செதுக்கப்பட்டவன் நான். இந்திய வரலாற்றில் 19 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஒரே எம்.பி. நான்தான். மிசா சட்டத்தில் 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக 13 முறை நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என்றார்.

மாநிலங்களவையிலிருந்து இன்றுடன் ஓய்வுபெறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மேஜைகளைத் தட்டி சக உறுப்பினர்கள் பிரியாவிடை அளித்தனர். நாடாளுமன்றத்தின் சிங்கம் என அழைக்கப்படும் வைகோ இன்றுடன் ஓய்வுபெறுகிறார். கூட்டாட்சி, சமூக நீதி பிரச்னைகளுக்காக ஒலித்தது அவரது குரல் என மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் புகழாரம் சூட்டினார்.