“நூலக ஊழலில் ஈடுபட்ட ஒருத்தரையும் விடக்கூடாது!” - வைகோ ஆவேசப் பேட்டி
நூலக ஊழலில் ஈடுபட்ட ஒருத்தரையும் விடக்கூடாது என திமுக அரசைச் சாடி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசப் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நூலகத்தில் ஊழல் செய்வதை உலகில் எந்த அரசும் செய்திருக்காது. ஆனால், ஸ்டாலின் அரசில், அதுவும் பெரியார் பெயரை வைத்து அவர்கள் அடித்த கொள்ளை, உலகிலேயே எந்த நூலகத்திலும் எந்த அரசும் செய்யாதது. அறிவுச் சோலைக்குள் ஊழல் கருநாகம் படம் பிடித்து ஆடவிட்டது முந்தைய அரசு. புத்தகங்களின் தலைப்புகளைப் பார்த்தால் மிரண்டு போய்விடுவீர்கள். உலகத்துக்கே ஆபத்தான ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கண்ட புத்தகங்களை எழுதி, ரூ.2,000, ரூ.3,000-க்கு விற்பனை செய்துள்ளனர். புத்தகக் கொள்முதலில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்குச் செல்ல வேண்டும். ஒருவரைக்கூட விடக்கூடாது. நூலக ஊழலில் ஈடுபட்ட முந்தைய அரசைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 மாதங்களுக்கு மேல் ஆட்சி நடக்காது என்று சாபம் விட்டார்கள்.. Mr. 6 மாதங்களுக்கு மேல் ஆட்சி நடக்காது என்று சொன்ன பெரிய தலைவரே... 5 ஆண்டுகள் விஜய் ஆட்சியில் இருப்பார். அடுத்த தேர்தலிலும் விஜய் தான் வெற்றி பெறுவார். இடைத்தேர்தலில் விஜய் வெற்றி பெற மாட்டார் என சொன்னார்கள். ஆனால் இனி வரும் காலத்தில் வரும் அனைத்து இடைத்தேர்தலும் விஜயின் அணிதான் வெற்றி பெறும்" என்றார்.

