விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் அல்ல- வைகோ
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனரின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜி.கே.வாசன், வைகோ உள்பட பலரும் மரியாதை செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனரின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜி.கே.வாசன், வைகோ உள்பட பலரும் மரியாதை செலுத்தினர்.அதன்பின் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த வைகோ, “முதல்வர் விஜய் அவர்கள் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் அல்ல, அவர் தமிழகத்தை அரசியலை தான் முன்னெடுக்க வேண்டும். அதுவே என் விருப்பம்” என்றார்.
இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்ற ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மிழக முதலமைச்சர் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

