"தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர்”- வைகோ ஆவேசம்

 
"தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர்”- வைகோ ஆவேசம்

தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது. மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு தகவல் அனுப்பலாமே என்று சொன்னதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. மாநில அரசுகளை கலைக்கின்ற அதிகாரமுள்ள இந்த சட்டப்பிரிவை அகற்ற வேண்டும் என்பதுதான், அண்ணா காலத்திலிருந்து, கலைஞர் காலத்திலிருந்து திமுக எடுத்த நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசை கவிழ்க்க இதை பயன்படுத்தலாம் என்று திமுக எப்படி சொல்கிறது. திமுகவில் எங்களை நடத்திய விதத்தில் மதிமுக தொண்டர்கள் அவமரியாதையாக கருதினார்கள். தேர்தலுக்கு பின் அதிமுக கட்சி அமைக்க திமுகவே ஆதரவு கொடுக்க முன் வந்தது என்றால் ஏதோ இருக்கிறது.  எதிரணியில் இருந்து விஜய்க்கு வரும் தாக்குதல்களை தடுக்கின்ற கவசமாக மதிமுக இருக்கும்” என்றார்.