“விஜய் அப்படி சொல்லவே இல்ல” - வைகோ

 
தவெகவுடன் சேர்வதற்கு ரூ.50 கோடி பேரமா?- வைகோ பரபரப்பு பேச்சு

மதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் பதவி விலக சொல்லவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நீடித்து வந்த மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தது. வெற்றி பெறும் கட்சியை நோக்கி நகர்வது தான் தமிழக அரசியலின் தற்போதைய கூட்டணி தர்மமா? என மதிமுக மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் பதவி விலக சொல்லவில்லை. எம்.எல்.ஏக்கள் இருவரை நானே பதவி விலகச் சொன்னேன். பதவி விலகும் எம்.எல்.ஏக்களின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்ய வர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். நேரம் வரும்போது பிரச்சாரத்துக்கு வருகிறேன் என முதல்வர் விஜய் சொன்னார்” என்றார்.