"தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன்,கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை"- வைகோ

 
ச்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். நேற்று வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் சந்தித்திருந்த நிலையில், இன்று முதல்வரை சந்தித்தார்.

முதல்வருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “45 நிமிடம் முதல்வர் விஜயை சந்தித்து பேசினேன். தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன்,கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன். ஸ்டெர்லைட் தொடங்கியது முதலே மதிமுக போராடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளேன். பின் சட்டப்போராட்டம் மூலமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம். ஸ்டெர்லைட் ஆலையை வேறு ஒரு வடிவத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினேன். தனிப்பட்ட முறையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். எனது நாடாளுமன்ற உரைய தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சிக்கு வருமாறு முதல்வரை அழைத்தேன். மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வார்களா என்பதை இப்போது சொல்ல முடியாது” என்றார்.