விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை- வைகோ
ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நான் முதலயே கூறிவிட்டேன், நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம், நாங்கள் அவர் அரசாங்கத்தை வரவேற்கிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகொ, “விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது எனது கருத்து. . அதிமுக ஆதரவு கொடுப்பதற்கு முன்பே அவருக்கு பெரும்பான்மை இருந்தது. விஜய் அரசின் செயல்பாடுகளை திமுகவைப் போல 6 மாதம் உற்றுநோக்குவோம். விஜய் அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். திமுக கூட்டணியில் தொடர்கிறோம், தோழமை தொடரும். விஜய்க்கு ஆதரவா? எதிர்ப்பா? என இப்போது கூற முடியாது. ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நான் முதலயே கூறிவிட்டேன், நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம், நாங்கள் அவர் அரசாங்கத்தை வரவேற்கிறோம். இதுவரை எந்த முதலமைச்சரும் என் வீட்டிற்கு வந்ததில்லை” என்றார்.

