ஈபிஎஸ்க்கு முதல்வர் நாற்காலி கேள்விக்குறிதான்”- வைகோ

 
வைகோ

இபிஎஸ்-க்கு முதல்வர் நாற்காலி கேள்விக்குறிதான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

''தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராவது மகிழ்ச்சி''- வைகோ

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சூரியன் எப்போதும் மறையாது. உள்துறை அமைச்சர் கூட திராவிட இயக்கம் இருக்காது என பேசுகிறார், இது வரம்பு மீறல். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். ன்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம், ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது. நெஞ்சிலே வஞ்சகத்தை வைத்துக் கொண்டு இயக்கத்தை கரித்துக் கொட்டுகிறார்கள்.  பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.