மதுவிலக்கிற்காக தனது தாயையே இழந்தேன்- வைகோ

 
பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்! – வைகோ அழைப்பு

தமிழகத்தில் மது விலக்கு போராட்டத்திற்கு வித்திட்டது மதிமுக என்றும் மதுவிலக்கிற்காக தனது தாயாரை இழந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியார் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். எனது தாயார் உண்ணாநிலை போராட்டம் நடத்தினார். ஓட்டு கேட்காமல் மது விலக்கிற்காக போராட்டம் நடத்தியது மதிமுக. மது விலக்கிற்காக போராடி எனது தாயாரையே இழந்தேன். மது ஒழிப்பிற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி நடைபயணம் மேற்கொண்டு எனது தாயாரையும் இழந்தவன் நான்.

மது ஒழிப்பில் பல கட்சிகளுக்கு தற்போது ஆர்வம் வந்துள்ளது. திருமாவளவன் தற்போது மாநாடு நடத்துகின்றார். எங்கள் சொந்த ஊரில் நடந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
மது ஒழிப்பு தொடர்பாக ஸ்டாலினும் திருமாவும் நாடகமாடுகிறார்கள் என  ஒன்றிய இணை அமைச்சர் முருகன் கூறுகிறார்,எல்.முருகன் எப்போதும் பூசி மொழுக கூடியவர். திருமாவளவனின் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற கருத்தில்  நான் தலையிடவில்லை” என்றார்.