சங்கரய்யா உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நிலை வைகோ நலம் விசாரித்தார்.
விடுதலை போராட்ட வீரரும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவரும், பொதுவுடமைக் கட்சி இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 36 பேரில் ஒருவரும், 102 வயதில் எண்பதாண்டு பொதுவாழ்க்கைக்கு உரியவரும், தமிழ்நாடு அரசின் தகைசால் விருது பெற்றவருமான என்.சங்கரய்யா அவர்கள் முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருத்துவமனையில் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளிடமும், சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினர்களிடமும், அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.