மதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமாவா? முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு

 
ச்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். நேற்று வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் சந்தித்திருந்த நிலையில், இன்று முதல்வரை சந்தித்துள்ளார். சந்திப்பின்போது ஸ்டெர்லைட்டுக்கு மீண்டும் அனுமதி அளிக்கக்கூடாது என விஜயிடம் வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட்டில் புதிய உற்பத்தி பிரிவு தொடங்க உள்ளதாக தகவல் வெளியானதால் அதற்கு அனுமதி அளிக்க கூடாது என முதல்வரை நேரில் சந்தித்து வைகோ பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Image

இதனிடையே மதிமுக பொதுக்குழு வரும் 24ஆம் தேதி கூட உள்ள நிலையில் அதில் திமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த செயற் குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து பலரும் வெளியேற வேண்டும் என்று வைகோவிடம் வலியுறுத்தினர். ஆனால் வைகோ அனைவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் வரவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வைகோ உறுப்பினர் அனைவரும் கருத்தை ஏற்று திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. அத்தகைய விஷப்பரிட்சையில் ஈடுபட வைகோ விரும்ப மாட்டார். வைகோ கூட்டணியில் இருந்து வெளியேறினால் மதிமுகவிலிருந்து பலர் வெளியேறுவார்கள் என்று வைகோவுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் தைரியத்தை வரவழைத்து வைகோ தனது எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா? என்பது பெரிய கேள்வியே!