மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கிவரும் விஜய்க்கு பாராட்டுகள்- வைகோ
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ தனது எக்ஸ் தளத்தில், “இன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

