வீடு திரும்பினார் வைகோ! நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என அறிவுரை

 
பேனர் அகற்றுவதில் சிக்கல்… ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்… வருத்தம் தெரிவித்த வைகோ!

இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார்.

tn

நெல்லையில் தனது கட்சியின் நிர்வாகியின் மகள் திருமணத்திற்கு செல்வதற்காக கடந்த 25-ஆம் தேதி தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அப்பொழுது கால் இடறி அவர்  கீழே விழுந்துள்ளார். இதில் இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பி அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு இடது தோளில்  மூன்று இடங்களில் எலும்புகள் உடைந்து இருந்த நிலையில், அதை செய்து சரி செய்ய கடந்த  29ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து  வைகோ ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார். அடுத்த 10 நாட்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என மதிமுக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.