வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு - இன்று விசாரணை!

 
supreme court

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவையிலும் நள்ளிரவு வரை வாக்கெடுப்பு நடத்தி இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான பல்வேறு எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி, ஜே.டி.யு, ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.