வடிவேலுவின் தாயார் உடலுக்கு மு.க.அழகிரி நேரில் அஞ்சலி!!

 
tn

 நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு மு.க. அழகிரி நேரில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு.  வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வரும் நிலையில் அவரது தாய் சரோஜினி வயது முதிர்வு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.  கடந்து சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை வீரகனூரில் உள்ள இல்லத்தில் மரணம் அடைந்துள்ளார்.  நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும்,  திரையுலகினரும் தங்களது இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

ttn

இந்நிலையில் வடிவேலு தாயார் உடலுக்கு முன்னாள்  மத்திய அமைச்சரும் ,முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.  மதுரையில் வடிவேலுவிடம் நேரில் ஆறுதல் தெரிவித்த அவர் தனது இரங்கலையும் பதிவு செய்தார்.