கீழடிஅருங்காட்சியத்தை வியந்து பார்வையிட்ட நடிகர் வடிவேலு

கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு முதல்முறையாக பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, “தமிழகத்தில் தோண்ட தோண்ட நம்முடைய பெருமைகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தமிழகம் உருவாகி இருக்கும் போல, தமிழகத்தில் இது போன்ற பொக்கிஷங்கள் கிடைத்திருப்பது புல்லரிக்க வைக்கிறது. உலகம் முழுவதும் தெரியவைக்கும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த வளாகத்தில் உள்ள தாவரங்கள் அனைத்தும் சங்க காலத்தில் தொடர்புடையதாக உள்ளன. இந்த ஊர் எனது தாயார் பிறந்த ஊர், நாங்கள் பிறந்தது இங்குதான், இது மிகவும் பெருமையாக உள்ளது. பல்வேறு நாடுகளுடன் வணிக தொடர்பு இருந்துள்ளது. சின்ன சின்ன பொருள்களை விற்பனை செய்துள்ளனர். உலகன் மூத்த மொழி, தாய்மொழி தமிழ் மொழிதான், இந்த மாதிரி மொழி இருக்கும் போது வேறு மொழி எதுக்கு? தமிழ்தான் நம்ம தாய்.. நமக்கு இருமொழியே போதும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,
கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய்குமார் இருவரும் நவீன தொழில்நுட்ப பயிற்சிக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று வந்ததற்கு பாராட்டுக்கள். தமிழக அரசின் ஏற்பாட்டில் போய் வந்தது கீழடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும்” என்றார்.