அன்புமணியுடன் வடிவேல் ராவணன், திலகபாமா சந்திப்பு

 
ச்

அன்புமணியுடன் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா சந்தித்தார்.

பாமக கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தலை கருத்தில் கொண்டு பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கிவிட்டு அக்கட்சியின் நிறுவனர் என்ற முறையில் தன்னை தானே பாமகவின் தலைவராக ராமதாஸ் அறிவித்துகொண்டு அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் என அறிவித்திருந்தார். இதற்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமாக கட்சியின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்திலும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் அக்கட்சி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பொருளாளர் திலகபாமா சந்தித்தார். ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சனையில், அன்புமணிக்கு ஆதரவாக பேசிய திலகபாமாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டார். இந்த சூழலில் திலகபாமா, வடிவேல் ராவணன் இருவரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் சமரசமாகினர்.