‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’... காரணம் என்ன?

 
வடக்கன்

‘வடக்கன்’ திரைப்படத்தின் தலைப்பு ‘ரயில்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Vadakkan

தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளராக இருப்பவர் பாஸ்கர் சக்தி. 'எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'நான் மகான் அல்ல', 'பாண்டியநாடு' உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அவர் எழுதிய வசனங்கள் மிகவும் பிரபலமானவை. 'அழகர்சாமி குதிரை' படத்தில் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். வசனகர்த்தா, கதாசிரியராக பணியாற்றி வந்த அவர் தற்போது வடக்கன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உருவாகி வரும் வட மாநில தொழிலாளர்களை பற்றி இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜனனி இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பெயர், ‘ரயில்’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம்! எங்கள் *டிஸ்கவரி சினிமாஸ்* நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் *’வடக்கன்’* திரைப்படத்தின் பெயர், *தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால்*, தற்போது *’ரயில்’* என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்! உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.