உதகை 125வது மலர் கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..

 
flower exibition

உதகையில் நடைப்பெற்று வந்த 125-வது மலர் கண்காட்சி, சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மலைகளின் அரசியல் அழைக்கப்படும் உதகையில்  கோடை சீசன் தொடங்கியது முதல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அத்துடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவின்  முக்கிய நிகழ்ச்சியான பிரசத்தி பெற்ற 125 வது மலர் கண்காட்சி கடந்த 19-ம் தேதி தொடங்கியது.  

 மலர் கண்காட்சி

இதில்  85 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 46 அடி அகலம் 22 அடி உயரத்திலான தேசிய பறவையான மயில் உருவம்,  125-வது மலர் கண்காட்சியை குறிப்பிடும் வகையில் 16 ஆயிரம் மலர்களை கொண்டு 125-th flower show வடிவமும், தாவரவியல் பூங்கா உருவாக்கபட்டு 175 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக  15 ஆயிரம் மலர்களை கொண்டு 175 Year of garden உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 60 ஆயிரம் மலர்களைக் கொண்டு  தமிழ்நாட்டு மாநில சின்னங்கள் மற்றும் அழிந்து வரும் வன விலங்குகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.  

நீலகிரி

இந்த 5 நாட்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த  மலர்கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் இந்த  விழாவானது  நேற்றுடன் நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டு நிறைவு விழாவும் நடத்தப்பட்டது.  அதில்  427 பேருக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியால்,  மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மலர் அலங்காரங்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கபட்டிருக்கும்.