முன்னாள் எம்.எல்.ஏ. உசிலம்பட்டி மகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

 
admk

அமமுகவை சேர்ந்த அமைப்பு செயலாளரும், அமமுக மதுரை மாநகர் புறநகர் மாவட்ட செயலாளருமான உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.மகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவரு உசிலம்பட்டி மகேந்திரன். இவர் ஜெயலாலிதா மறைவிற்கு பின் கட்சியில் ஏற்பட்ட பிளவால் டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவில்  இணைந்தார். இதனை தொடர்ந்து அவர் அமமுகவின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும் அமமுக மதுரை மாநகர் புறநகர் மாவட்ட செயலாளராகவும், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் விளங்கி வந்தார். 

இந்த நிலையில், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன் அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் மீண்டும் அடிப்படை உறுப்பினராக தன்னை  இணைத்து கொண்டார்.