அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகாம் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் திரை பிரபலங்களும் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். செல்போன் மூலம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


 -