தங்கம் விலை மூன்றில் ஒரு பங்கு குறையுமாம்...! அமெரிக்க நிபுணர் கணிப்பு!

 
us

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என அமெரிக்காவை சேர்ந்த John Mills என்ற பங்குச் சந்தை நிபுணர் கணித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக தங்க விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதால் அதன் மீதான ஈர்ர்ப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்  சவரன் ரூ.68,080க்கும், கிராம் ரூ.8,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

இந்த நிலையில், உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர் கணித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த John Mills என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது.  ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்பு என்பதால் இந்த கணிப்பு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.