அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
1

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்  மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்,  அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் தனது மகன் வழக்கில்,  அவர் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும்,  அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக 2021 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவரது மூத்த மகன் ஹண்டர் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது