இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 10% வரி விதிப்பு!
இந்தியா உட்பட 17 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதும் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளது அமெரிக்கா.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% தற்காலிக வரி விதிப்பை அறிவித்திருந்தது. இந்த வரி விதிப்பு காலாவதியான நிலையில், புதிய வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , "கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கும் பொருள்களின் ஏற்றுமதியைத் தடுக்க இந்தியா உட்பட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், யு.எஸ்.டி.ஆர். பரிந்துரையின்படி 10% வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று கூறினார்.
மேலும், தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைக்கொண்டு தயாரிக்கும் பொருள்களின் ஏற்றுமதியைத் தடுக்க சட்டங்களை இயற்றாத பிரிட்டன், சீனா, ஜப்பான் உட்பட்ட 43 நாடுகள் மீது 12.5% வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

