நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!!

 
vote

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

சென்னை  மாநகராட்சியில்  உள்ள 200 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஜனவரி 1ஆம் தேதியை இலக்காகக் கொண்டு கடந்த ஆண்டு முதலே பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்துகொள்ள ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.  அந்த வகையில் டிசம்பர் மாதம் வாக்காளர் திருத்தப் பணிகள் வார இறுதி நாட்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தன.

election

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியீடும் வாக்காளர் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பொதுமக்கள் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 ஆக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ttn

தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்கம் ஆகியவை ஆகிய திருத்தங்கள் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில்,  அதன் பணிகள் முடிவடைந்ததால் இன்று வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது