UPSC தேர்வர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பிப்பது எப்படி?
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு 2027க்கு தயாராகும் மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இலவச பயிற்சி மைய சேர்க்கை: கடந்த ஆண்டைப் போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் (Admission), இந்த மதிப்பீட்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 18.07.2026
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 18.07.2026
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2026
நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியீடு: ஆகஸ்ட் மூன்றாம் வாரம்
தேர்வு நாள் மற்றும் நேரம்: 06.09.2026 (காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 வரை)
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் இலவச பயிற்சி மைய சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.skilldevelopment.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, 18.07.2026 முதல் 03.08.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

