உ.பி மொராதாபாத் பாஜக வேட்பாளர் மாரடைப்பால் காலமானார்..!

 
1

உ.பி மொராதாபாத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங் (71) காலமானார். 

குன்வார் சர்வேஷ் சிங்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் செல்வாக்கு மிக்க பாஜக பிரமுகராக விளங்கிய இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொண்டையில் இவருக்கு பிரச்சினை இருந்ததாகவும், அதற்காக அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட குன்வர் சர்வேஷ் சிங் முழுமையாக பங்கேற்கவில்லை. 

 உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்,  தனது எக்ஸ் பக்கத்தில்,  “மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான குன்வர் சர்வேஷ் சிங்கின் மறைவு என்னை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பாஜகவின் குடும்பத்துக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். அவரது குடும்பத்தினருக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை அளிக்க கடவுள் ராமரை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.