பவானியில் நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு- ஆட்சிக்கு கெட்ட பெயர் எடுத்துக் கொடுப்பதாக திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

இன்று 28-03-2025 காலை 12 மணியளவில் பவானி நகராட்சியின் அவசரக் கூட்டம் நகர் மன்ற தலைவர் சிந்துரி (திமுக) அவர்களின் தலைமையில் இறை வணக்கத்துடன் தொடங்கியது.
கூட்டத்தில் பவானி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்று நகர் மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் எப்படி எங்களை கலந்து ஆலோசனை செய்யாமல் முடிவு செய்யலாம் எனக் கேட்டனர். அதற்கு அதிகாரிகள், நகர்மன்ற தலைவரின் அறிவுரைப்படி தான் அனைத்து சாலை பணிகளும் முடிவு செய்யப்பட்டன என கூறினர். ஆனால் நகர மன்ற தலைவரோ எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் நகர மன்ற தலைவர் இல்லாமல் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று பதில் சொன்னார்கள்.
இப்படியே மூன்று வருட காலமாக நகர மன்ற தலைவர் அவர்கள் மெத்தனமாக பதில் சொல்லி எந்த வேலையையும் தங்களது பொறுப்பை உணராமல் காலம் கடத்திக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்டித்தும், மெத்தனமாக செயல்படும் தலைவரின் செயல்களை கண்டித்தும், ஆட்சிக்கு கெட்ட பேர் எடுத்துக் கொடுக்கும் மனப்போக்குடன் செயல்படும் தலைவரை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். மன்ற உறுப்பினர்களிடம் கடந்த மூன்று வருடங்களாக இதே பதிலை சொல்லிக்கொண்டு நகராட்சி அலுவலர்களிடமும் ஒத்துப் போகாமல், நகர மன்ற உறுப்பினர்களுடனும் ஒத்துப் போகாமல் தலைவர் சிந்து இளங்கோவன் அவர்கள் காலம் கடத்திக் கொண்டுள்ளார். இதனைக் கண்டித்து இன்று நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் மணி, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ் குமார், கார்த்திகேயன், பாரதிராஜா, சுமதி கணேசன், ரவி, கோகிலாம்பாள், கவிதா உதயசூரியன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.