"நவ. 1 முதல் டாஸ்மாக்கில் ரூ.1,000-க்கு மேல் UPI, கார்டு கட்டாயம்"- தமிழக அரசு அதிரடி
நவ. 1 முதல் டாஸ்மாக்கில் ரூ.1,000-க்கு மேல் UPI, கார்டு கட்டாயம்.மேலும் ஜனவரி 1, 2027 முதல் ரூ.500-க்கு மேல் UPI, கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் போது எழும் தேவையற்ற புகார்களை தவிர்க்கவும், ரொக்கமாக அதிகளவிலான பணத்தினை கையாளுவதை தவிர்க்கவும், நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவும். கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு மின்னணு பரிவர்த்தனை கேட்டுக் முறையில் மட்டுமே பணம் செலுத்திட கொள்ளப்படுகிறார்கள்.
நவ. 1 முதல் டாஸ்மாக்கில் ரூ.1,000-க்கு மேல் UPI, கார்டு கட்டாயம்.மேலும் ஜனவரி 1, 2027 முதல் ரூ.500-க்கு மேல் UPI, கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் செயல்படும் 4,048 டாஸ்மாக் கடைகளிலும் புதிய நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. பணத்தை கையாள்வதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசீதில் குறிப்பிட்ட தொகையை தவிர கூடுதல் பணம் வசூலிக்க கூடாது என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் எளிமையாக இணையவழி மதுபான முன்பதிவு முறையின் மூலமும் தொகையினை செலுத்தி கடைக்கு நேரில் வந்து மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

