ஜனநாயகன் அப்டேட் : இரு வாரங்களுக்குள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்..!
முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன், தணிக்கை குழு அனுமதிக்காக காத்திருக்கிறது.
அந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரினம் செய்தார்.ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையில் பங்கேற்றார்.
வெங்கட் கே.நாராயணா கூறியதாவது: முருகன் தரிசனம் மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகி, வெற்றியடைய சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
படத்தின் தலைப்பு ஜனநாயகன் தான். ஆனால், நடிகர் விஜய், தற்போது தமிழகத்தின் ஜனநாயகனாக மாறி உள்ளார்.ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரிய குழுவின் அனுமதி கிடைத்த உடனேயே வெளியீட்டு தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஜூன், 22ம் தேதி, முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள். எனவே, இரு வாரங்களுக்குள் ஏதாவது ஒரு தேதியை தேர்வு செய்து, வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
ஜனநாயகன் டைட்டிலில், தளபதி விஜய் அல்லது முதல்வர் விஜய் என, எப்படி பெயர் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, முதல்வர் தெரிவித்த பிறகே முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்

