“புயல் ஆந்திராவிற்கு சென்றால் சென்னையில் கனமழை கொட்டும்”- தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

 
s s

வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 26-ம் தேதி (நாளை மறுநாள்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இந்நிலையில் புயல் குறித்த அப்டேட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், “புயலின் சக்கரம் வடக்கு தமிழக கடற்கரையை நெருங்கி ஆந்திராவிற்கு வளைந்து செல்லும் - சக்கரம் வடக்கு தமிழக கடற்கரையை நெருங்கி ஆந்திராவிற்கு திரும்பினால் சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்படுகிறது. இந்தச் சக்கரம் ஆந்திராவிற்குப் போகிறது, எனவே தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் பெரிய கனமழை இருக்காது. கேரளாவில் மழை பெய்யும், கன்னியாகுமரி மற்றும் நீலகிரிகளிலும் மழை பெய்யக்கூடும். புயலின் நிலை குறித்து கவனிக்க வேண்டிய நாட்கள் - அக்டோபர் 27/28. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை வருமா இல்லையா என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். நவம்பர் முதல் வாரத்தில் பருவமழை தொய்வடையும். 


இந்தப் புயல் ஆந்திராவிற்கு நகர்ந்த பிறகு, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைக்கு முன் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். வட தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரையில் உள்ள மீனவர்கள் கடலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் அக்டோபர் 25 முதல் 28 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கன்னியாகுமரியிலும் , நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி (பண்டலூர் - அவலாஞ்சி பகுதிகள்) போன்ற தென் மாவட்டங்களில் மேற்கிலிருந்து வரும் காற்றுடன் கூடிய மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு குறைவு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.